செபாஸ்டின் பாதர்


திருச்சி தூய வளனார் கல்லூரியில் அப்போது இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருந்தேன்.

எங்கள் கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டின் டிசம்பர் மாதமும் வருடத்தின் இரண்டாம் செமஸ்டரின் தொடக்கத்தில் கல்லூரிக் கலைவிழா நடப்பது வழக்கம்...

அந்த ஆண்டு திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் INDEP கலைவிழாவின் சிறப்பு விருந்தினர்.

நான் ஒவ்வொரு ஆண்டும் கவிதை,கட்டுரை,பேச்சு, நாடகம், போன்ற போட்டிகளில் பங்கு கொள்வேன்...

அந்த ஆண்டும் அப்படித்தான் கலந்துகொண்டேன்.

பேச்சுப்போட்டியில் முதல்பரிசு கிடைத்தது...

ஜேம்ஸ் வசந்தன் கரங்களால் பரிசு பெற்றேன்.

என் நெஞ்சுக்கு நெருக்கமான அருட்தந்தை செபாஸ்டின் ஆனந்த் அவர்கள் அப்போது முதல்வராக இருந்தார்...

எனக்கு ஆங்கில வகுப்பு எடுத்தவர்.

சிக்ஸ் டேல்ஸ் ஃப்ரம் சேக்ஸ்பியரும் , டேல்ஸ் ஃப்ரம் த டு சிட்டீஸும் , அஸ் யு லைக் இட் பாடங்களும் அவர் நடத்திய ஞாபகம்...

அவரின் அலைபேசியில் எப்போதும் " பச்சை நிறமே பச்சை நிறமே " என்ற பாடல்தான் ரிங்க்டோனாக ஒலிக்கும்....

எமது கல்லூரியில் மாதமொருமுறை இறைவழிபாட்டுக் கூட்டம் நடக்கும்..

அப்படியொரு மாதத்தில் காலையில் முதல் பாடவேளை இறைவழிபாடு தொடங்கியது..

அப்போது வெடி என்ற திரைப்படம் வெளிவந்த தருணம்...

"இப்படி மழை அடித்தால் எப்படிக் குடை பிடிப்பேன்.
என்று வெளியே பாடல்கள் கேட்கிறது

இப்படி மாஸ் வைத்தால் நான் எப்படிக் கலந்திடுவேன் என்று
மாணவர்கள் தெறித்து ஓடுகிறார்கள் "

என்று செபாஸ்டின் பாதர் சொல்லத் தொடங்கியதும்
லாலி மன்றமே சிரிப்பில் அதிர்ந்தது.

கொஞ்ச நாளுக்குமுன் செபாஸ்டின் பாதர் இறந்து போனதைக் கேள்வியுற்று அதிர்ச்சியுற்றேன்....

எளிமை என்ற சொல்லின் வடிவமாகத் திகழ்ந்தவர் செபாஸ்டின் பாதர்....

என் போன்ற ஆயிரமாயிரம் தம்பிகள்
செபாஸ்டின் பாதர் போன்று எண்ணற்ற வெள்ளைத்துறவிகளின் அணைப்பின் கதகதப்பில்  வளர்க்கப்பட்டிருக்கிறோம்...

இயேசு சபைக்கும் தூய வளனார் கல்லூரிக்கும் காலமும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

Comments