பிறர்க்கென முயலுநர்


பிறர்க்கென முயலுநர்

☆☆☆☆☆

இருட்டில் இருந்தே
பழக்கப்பட்டுவிட்ட
நமக்கு
வெளிச்சம் ரொம்பவே
அந்நியமாகிப் போனது.

நமக்கான
வெளிச்சத்தை
காட்டுவோரையும்
பரிகசித்து
காரி உமிழ்கிறோம்

பின்ன என்ன
வெளிச்சம்
கண்களை
கூசத்தானே செய்யும்.

நாம எக்கேடுகெட்டா
இவனுங்களுக்கு
என்னவாம்?

கிளர்ச்சி வேண்டாம்
புரட்சி வேண்டாம்
சமூக விழிப்புணர்வு
ஒரு மண்ணும் வேண்டாம்

எத்தனைநாளோ
எத்தனை ஆண்டுகளோ
எப்படியானாலும் பரவாயில்லை
நாம் இப்படியே
இருட்டிலேயே இருப்போம்...

#பாரதிகனகராஜ்

12.08.2017

இரவு 10.45 மணி</div>

Comments

Popular Posts