கழனியூரனுக்கு இரங்கல்


கனடா நாட்டின் இலக்கியத்தோட்டம் அமைப்பு கடந்த ஆண்டு கி.ராஜநாராயணன் அய்யாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் சிறப்பு விருதாக 1 லட்சம் ரூபாய் வழங்கியது....

அந்தக் கூட்டம் சென்னை  மயிலாப்பூர் கவிக்கோ அரங்கில் நடைபெற்றது..

எஸ்.ராமகிருஷ்ணன் கி.ராவின் படைப்புலகம் குறித்துப் பேசினார்....

அக்கூட்டத்திற்கு கி.ராவால் உடல்நிலை சுகமில்லாததால் வர இயலவில்லை...

அவருக்கான ஏற்புரையை கழனியூரன்தான் வாசித்ததாக நினைவு...

கழனியூரான் கிராவுக்கு தத்துப்பிள்ளை,இலக்கிய வாரிசு,  பல்வேறு கதைகளை கிராமத்திலிருந்து சேகரித்து ஒலிப்பதிவு செய்து அதை எழுத்தால் எழுதி கிராவுக்கு அனுப்பிவைப்பார் கழனியூரன்....

அன்றைய கூட்டத்தில் பேசிய கழனியூரனின் பேச்சு மிக முக்கியமானது....

தமிழுக்கு எப்படி கி.ரா. ஒரு தனிப் பல்கலைக்கழகமோ அதுபோல கி.ரா வுக்கான தனிப்பெரும் சொத்து கழனியூரன்....

இவருடைய சில ஹைக்கூ கவிதைகளையும் வாசித்திருக்கிறேன்...

கழனியூரன் தமிழுக்கும் நாட்டுப்புறவியலுக்கும் பெரும் சொத்து....அவர் செய்த பணி அளப்பற்கரியது.

அவருடைய இழப்பு நம் மொழிக்கான இழப்பு...

தமிழ் தன் இன்னொரு தலைமகனையும் இழந்திருக்கிறது...

இதை இட்டு நிரப்ப இனி யார் வருவாரோ...

கழனியூரானின் இறப்பு பேரிழப்பு....

தமிழுக்கு நீவிர் செய்த தொண்டுக்கு காலமெல்லாம் என் தமிழ்ச் சமூகம், உன்னை, உன் எழுத்தை நினைவில் வைத்திருக்கும்... உன் புகழ் நிலைக்கும்.

- பாரதி கனகராஜ்

28.6.2017
இரவு12.30

#

Comments