ஜெமினி அண்ணா



3 நாட்களுக்கு முன் மணப்பாறை மாட்டுச் சந்தைக்குச் சென்று மாட்டுச் சந்தையிலேயே இறந்துபோன ஜெமினி அண்ணனின் இறப்புச் செய்தியை சற்றுமுன்தான் கேள்விப்பட்டேன்.

அதிர்ச்சி என்னை
ஏதும் பேச விருப்பமின்றி அமைதியாக்கியிருக்கிறது.
"கனகு, கனகு" என்று அன்போடு அழைப்பார் ....
என் சிறு வயதிலிருந்தே எனக்கு வாழ்க்கையின் நுணுக்கங்களை கற்றுத் தந்த ஜெமினி அண்ணா....
என் தந்தையைவிட என்மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தவர்.
கடைசியாப் பார்க்கும் போது வாங்க அண்ணா ஆஸ்பத்திரிக்கு போலாம் என்றேன். சிரிக்க முடியாமல் லேசாகச் சிரித்து வைத்தார். இவர்களைப்போல இப்படியெல்லாம் வாழ வேண்டும் என நினைத்த என் முன்னுதாரணங்களில் ஜெமினி அண்ணா முதன்மையானவர்.

ஒங்களுக்கு ஒரு போன் வாங்கித் தரனும், ஒரு டீ சர்ட் வாங்கித் தரணும்னு நெனச்சிட்டு இருந்தேன். நம்ம தோட்டத்த  ஒங்க மேற்பார்வைல வெள்ளாம பண்ணனும்னு நெனச்சிட்டு இருந்தனே ....

அந்த செவப்பு வண்டில நான் வருவேன்னு சுருமான் பட்டில எனக்காக காத்திருந்தியே அண்ணா...

உன்னை அப்பா என்றழைக்கத்தான் பிள்ளையில்லை.
அப்பான்னு ஒன்ன கூப்டனும்னு நெனச்சிட்டு இருந்தனே அண்ணா.

அன்னக்கி காட்ல ரம்பம் பிடிச்சி மர மறுக்க சொல்லித் தந்தீங்க. மாட்டுச் சந்தைக்கு கூட்டிப்போறேன்னு சொல்லிருக்க.... என்னை எழுப்பாம நீ மட்டும் போனியே அண்ணா....

கடைசி வரைக்கும் என்னய மாட்டுச் சந்தைக்கு நீ கூட்டிட்டுப் போகவே இல்லல...
ஏன் ஜெமினி அண்ணா எங்கிட்ட சொல்லாம செத்துப் போனீங்க....

ஒங்களுக்கு வைத்தியம் பார்க்க ஏங்கிட்ட காசு இல்லாமப் போச்சேன்னு இப்ப அழுகையா வருது அண்ணா....

இனிமே எங்கையால ஒனக்கு சோறு போட முடியாதா?
யாருக்கும் தெரியாம நம்ம கடைல இருந்து வடை திருடி ஒனக்குத் தர முடியாதா?

ஏன் ஜெமினி அண்ணா எங்கிட்ட சொல்லாம செத்துப்போன....? ஒன்னய ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போகலையேன்னு கோபமா ?
நீ தானே அண்ணா கூப்ட கூப்ட வரமாட்டேன்ன......

ஒன்னோட ஒழைப்பின் வேர்வைய கட்டையான தேகத்தக் கண்டு இனி நான் பாடம் கற்க முடியாதா?...

எங்க அண்ணா இருக்க ?வாண்ணா.... கலையரசன் ஆஸ்பத்திரில போய்ப் பார்க்கலாம் . வாண்ணா வர மாட்டியா?

- பாரதி கனகராஜ்
15.02.2019
O2.36 pm

Comments

Popular Posts